நான் வரமாட்டேன் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள்: பிக்பாஸ் குறித்து சல்மான்கான்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 1 சீசன் முடிவதற்குள்ளாகவே பல சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் சந்தித்துள்ளது. ஆனால், இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 சீசகன் முடிவடைந்துள்ளது. 11-வது சீசன் வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் அறிமுக விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடந்தது.

விழாவில், நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான சல்மான் கான் கலந்துகொண்டு நடனமாடினார். அவர் பேசும்போது, நான் 4-வது சீசனிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். நான் ஒவ்வொரு சீசனின்போதும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டேன் என்று அடம்பிடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் என்னை விடுவதாக இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவதன்மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இந்நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் சந்தோஷ உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் யாரும் வன்முறையை கையாளவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த நாள் ஒன்றுக்கு சல்மான்கானுக்கு ரூ.11 கோடி சம்பளமாக கொடுப்பதாக கூறப்படுகிறது. இவரது சம்பளத்தை கேட்டு பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில் உள்ளனர்.