மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியது திமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்னதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் என்ற பெயரில் போர்க்கொடி தூக்கினார். இவரது இந்த தர்ம யுத்தம் ஜெயலலிதாவின் சமாதியில் 30 நிமிட தியானத்திற்கு பின்னரே தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் அதிரடி இந்திய அளவில் பேசப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள்: அடடா ஆரம்பித்துவிட்டார் அழகிரி!

அதே போல சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்லும் முன்னர் சசிகலாவும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மூன்று முறை சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்துவிட்டு சென்றார். அதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனது கணவருடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் இருந்து தனது அரசியல் ஸ்டண்டை நடத்தினார்.

இதையும் படிங்க பாஸ்-  அரசியலில் இறங்கும் முன்பே அதிரடியை ஆரம்பித்த ரஜினி

அதே போல தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக சவால் விட்டுவந்த அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது அரசியலை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு பேரணியாக சென்று பல ஆயிரம் பேரை திரட்டி அஞ்சலி செலுத்தி ஆரம்பித்துள்ளார். இப்படியாக தமிழகத்தின் சமாதி அரசியல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.