இது சமந்தாவின் விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியன்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீமராஜா வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்திக்குத்தான் இப்படம் ரிலீஸ் ஆகிறது, சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி  என அதிரடி கூட்டணியில் இப்படம் வெளிவருகிறது.

ஏற்கனவே வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்றவை மெகா ஹிட் ஆனதால் இந்த கூட்டணியை தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இமானின் இசைக்கூட்டணியும் இப்படத்திற்கு கை கொடுக்குமா என்பதை திரையில்தான் பார்க்க வேண்டும் ஏற்கனவே இந்த கூட்டணியில் வந்த இரண்டு படங்களும் மியூசிக்கல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கன்னடத்தில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் யு டர்ன் என்ற பெயரில் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதில் சமந்தா, ஆதி இருவரும் நடித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில் சமந்தா நடித்த இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.