தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமான சமந்தா தமிழில் நீதானே என் பொன்வசந்தம், பாணா காத்தாடி,தெறி,தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகனான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார் அதில் சமந்தா மணக்கோலத்தில் நிற்பது போலவும் அதன் அருகில் தான் நிற்பது போலவும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து  கூலான சமந்தா கடந்த வாரம் ஓடிப்போனேன், எப்படி இந்த புகைப்படம் வெளியானது தெரியவில்லை. முதல் பார்வையில் வந்த காதல் என பதில் சொல்லி இருக்கிறார்.