சமீபத்தில் நடிகை சமந்தா ஒரு தீவில் அரைகுறை உடைகளுடன் போஸ் கொடுத்து அதை டுவிட்டரில் பதிவேற்றினார் .பலரும் அதை விமர்சனம் செய்ய தொடங்கினர் ஒரு திருமணமான பெண் இப்படி செய்யலாமா என பதிவிட்டனர்.

இந்நிலையில் இந்த கமெண்டுகளுக்கு கடும் கோபமடைந்த சமந்தா தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில்…. “இது என்னுடைய வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நான் தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று கோபத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.