நடிகை சமந்தா தமிழின் முன்னணி நடிகையாக விளங்கிய சமந்தா,தெலுங்கு நடிகரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கரம்பிடித்தார்.

பிஸியாக இருந்தாலும் ஆதரவற்றவர்கள் இதய நோயாளிகளுக்கு உதவி வரும் சமந்தா திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு வந்தார். அவர் வந்ததை அறிந்த பலரும் அங்கு குவிந்தனர். திடீரென ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை விற்றார். சமந்தா காய்கறி விற்றதால் அங்கிருந்த மொத்த காய்கறிகளும் விற்றன. இதில் வந்த சிறிய பணத்தை ஆதரவற்றவர்களுக்கே வழங்குகிறாராம் சமந்தா.