விஷால், சமந்தா நடித்து வரும் ‘இரும்புத்திரை’ திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஷால், சமந்தா நடித்த கேரக்டர்கள் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்

இதன்படி விஷால் மேஜர் ஆர்.கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா டாக்டர் ரதிதேவி பி.எச்.டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். மேஜர் விஷால், சைக்காலஜி டாக்டருடன் கைகோர்த்து எதிரிகளை பந்தாடுவது தான் கதையாம்

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.