தனது முதல் பட ஹீரோவான அதர்வாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிகை சமந்தா நடிக்க உள்ளார்.

நடிகை சமந்தா, சினிமா உலகுக்கு பாணா காத்தாடி படம் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு தெலுங்கில் எடுக்கப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா படத்தால் ஆந்திராவிலேயே நீண்ட காலம் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகுதான் தமிழுக்கு வந்தார்.

 

இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அதர்வாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி -த்ரிஷா நடித்த 96 படத்தை தயாரித்த நந்த கோபால் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.