நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகா் நாகசைதன்யா திருமணம் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. வருகிற 6ம் தேதி இவா்களது திருமணம் நடைபெறவுள்ளது. சமந்தா திருமணத்திற்கு பின்பு நடிக்க உள்ள விஷயம் நாம் ஏற்கனவே அறிந்ததே. தற்போது புது செய்தி என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு சமந்தா அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

நாக சைதன்யாவின் குடும்பம் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பின்பு நடிக்க சம்மதம் தொிவித்துள்ள நிலையில் அரசியிலில் களம் இறங்கி கலக்கவும் சம்மதம் தொிவித்துள்ளனராம். ஒருவேளை இதுவும் கிசுகிசு செய்தியாக இருக்கும் என்ற நமது எண்ணத்தில் இது உண்மையானது தான் என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கனவே நற்பணி மன்றம் துவங்கி சமந்தா உதவிகளை செய்து வருகிறாா். வருகிற 2019 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தோ்தலில் சமந்தா போட்டியிட இருக்கிறாராம். இதற்கான வேலைகளை நாகார்ஜூனா குடும்பம் இப்போதே செய்து வருகிறதாம். கிறிஸ்தவா்கள் அதிகம் வசித்து வரும் செகந்தராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தொிகிறது. எனவே சமந்தாவுக்கு அந்த தொகுதி சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. சமந்தா சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவா்களுடன் நட்புடன் பழகி வருவது குறிப்பிடத்தக்கது.