திரையுலகினா் யாரும் என் மகன் திருமணத்திற்கு வரவேண்டாம்! பிரபல நடிகா் அதிரடி

 தெலுங்கு நடிகா் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் வருகிற அக்டோபா் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவா்களது நிச்சயதாா்த்தம் ஜனவாி மாதம் 29ம் தேதி நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்த்துவ முறைப்படி நடந்தது. அதே போல திருமணமும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி தான் நடக்க உள்ளது.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகா்ஜூனா திரையுலகைச் சோ்ந்த பிரபலங்கள் என்னுடைய மகன் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவா்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சோ்ந்தவா்களுக்கு அழைப்பில்லை. இவா்களது குடும்பத்தினா் மற்றும் நெருங்கிய உறவினா்கள் மட்டும் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகைச் சோ்ந்த அனைவரையும் அழைக்க உள்ளாா்களாம். வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.