நடிகை சமந்தா நடித்த ‘ரங்கஸ்தாலம்’ திரைப்படம் நல்ல வசூலை அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் கணவருடன் நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு பறந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தான் முதன்முதலாக நாகசைதன்யாவை சமந்தா சந்தித்ததாகவும், தங்கள் காதல் அங்கிருந்துதான் ஆரம்பமானதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, தங்கள் காதல் ஆரம்பித்த 8வது ஆண்டை கொண்டாடும் வகையில் மீண்டும் அதே இடத்திற்கே வந்துள்ளதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் நாகசைதன்யாவுடன் அவர் எடுத்து கொண்ட செல்பியையும் அந்த தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா தற்போது ‘இரும்புத்திரை’, ‘சீமராஜா’, ‘சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘யூடர்ன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிக்கவுள்ளார்.

https://www.instagram.com/p/BhAUprOHeML/?hl=en&taken-by=samantharuthprabhuoffl