samantha

சினிமாவில் ஹீரோக்கள் மட்டும் தான் திருமணத்திற்கு பின்பும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை திருமணம் முடிந்த பின் சினிமாவில் அந்தளவுக்கு தடம் பதிக்க முடியாது. ஆனால் இதை தகர்ந்தெறிந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர். சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார்.

சமந்தா திருமணம் முடிந்த கையோடு பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் சமந்தா சீமராஜா படத்தை தற்போது தான் நடித்து முடித்திருக்கிறார். இவரது திருமணத்திற்கு பின் வெளிவந்த நடிகையர் திலகம், ரங்கஸ்தலம், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் வெற்றி வாகை சூடியது. அதற்கு பின் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமந்தா அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் விரைவில் முடித்து விட்டு சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க போவதாக முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் தெலுங்கு வட்டாரத்தில் செய்திகள் உலா வந்தது.

naga chaitanya

ஆனால் அப்படி ஏதும் இல்லை என்று இது பற்றி சமந்தாவின் கணவர் நாகசைதன்யா கூறியதாவது, தற்போது பல படங்களில் சமந்தா நடித்து வருகிறார். ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்து வருவதால் அவருக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. அதையும் அவரே தான் முடிவு செய்துள்ளார். கொஞ்சம் நாட்கள் படங்களில் நடிக்காமல் இருப்பார் என்றும், அதன் பின் எப்போதும் போல தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்