சமந்தாவின் தாராள மனசு: நெகிழ்ச்சியில் சாய் பல்லவி

பிரேமம் பட மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவி முதன் முறையாக தெலுங்கில் வருண் தேஜுடன் “பிடா ” படத்தில் நடித்தார்.இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதில் சாய் பல்லவி தன்னுடைய இயல்பான நடிப்பால் தெலுங்கு திரைப்பட ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை பார்த்த சமந்தா  ட்விட்டரில் சாய் பல்லவிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இனி சாய் பல்லவி நடிக்கும் படங்களைத்  தவறாமல் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு சாய் பல்லவியும் சமந்தா அவ்வாறு கூறியது தனக்கு மிகவும்  மகிழ்ச்சி தருகிறது என்று பதில் அளித்துள்ளார். சமந்தா சாய் பல்லவியைப் பாராட்டியது இது முதல் முறை இல்லையாம், ஏற்கனவே ஒரு முறை தொலைக்காட்சி ஒன்றில் சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து அசந்து போய் சாய் பல்லவியை பாராட்டியுள்ளார் . நடிகைகள் இடையில் மோதலும் பொறாமையும் இருக்கும் இக்காலத்தில், சக நடிகையின் திறனைப் பாராட்டும் சமந்தாவைப் போல்  எல்லா நடிகைகளும் இருந்தால் நடிகைகளுக்குள் மோதல் என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் போகும்.