நயன்தாரா இடத்தை திடீரென பிடித்த சமந்தா

கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று ‘யூ-டர்ன். பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொலை ஒன்றை துப்பு துலக்கும் த்ரில் காட்சிகள் இந்த படத்தின் சிறப்பு அம்சம்

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகவும், இந்த படத்தை ‘சைத்தான்’ இயக்குனர் பிரதீப் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் சமந்தா ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது