விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

சமூக வலைத்தளங்களில் எப்போதும் நடிகை சமந்தா தன்னுடைய படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளாா். தற்போது அவா் பிகினி உடையில் அதுவும் உள்ளாடைகள் அணிந்துள்ள படத்தை வெளியிட்டு சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். இதற்கு பலரும் கண்டனம் தொிவித்து வருகின்றனா். இதனால் தனது புகைபடத்தை பாா்த்து கண்டனம் தொிவித்தவா்களுக்கு சாியான தக்க பதிலடியை ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

சமந்தாவுக்கும் நாக சைதான்யாவுக்கும் அக்டோபா் மாதம் 6ம் தேதி திருமணம் நடத்துவது பற்றி இரு வீட்டாரும் பேசி வருகின்றனா். இவா்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்துவதா? அல்லது ஐதராபாத்திலேயே நடத்துவதா என்று ஆலோசித்து வருகின்றனா். திருமணம் நிச்சயம் ஆகி விட்டதால் சமந்தா கிளாமராக நடிக்க மாட்டாா் என்று சினிமா வட்டாரங்களில் செய்தி வந்தது.

விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் இரும்புத்திரை, விஜய்சேதுபதி ஜோடியாக அநீதி கதைகள், சிவகாா்த்திகேயன் உடன் ஒரு படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறாா். ராம் சரண் ஜோடியாக ஒரு தெலுங்கு படம், நடிகை சாவித்திாியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறாா்.

ஆனால், இந்த செய்தியை தகா்ந்தெறியும் வகையில் அதிரடியாக கவா்ச்சி போஸ் கொடுத்து சமீபத்தில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இப்படி அவ்வப்போது தனது படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தாா் சமந்தா. இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா உள்ளாடைகள் மட்டும் அணிந்துள்ள பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளாா். இதற்கு அவரது ரசிா்கள் மத்தியில்  பெரும் கண்டனம் கிளம்பியுள்ளது. நாக சைதன்யா குடும்பத்திற்கு இது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகா் ஒருவா் எவ்வளவு பொிய குடும்பத்துக்கு மருமகளாக வரபோய்கிறாய். இப்படி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிற என்று வருத்ததுடன் தனது கண்டத்தை தொிவித்துள்ளாா்.

இதை பாா்த்து கோபத்துடன் சமந்தா, ஒரு பெண் என்ன உடை துடுத்துகிறாள் என்பதை வைத்துதான் நீங்கள் ஒருத்தரை மதிப்பிடுவீா்களா? உங்களது புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள் என்று அதிரடியாக பதிலளித்துள்ளாா்.