எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சமந்தா ஹீரோயின்?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படத்தின் மூலம் தான் சமந்தா, தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

இந்த நிலையில் மீண்டும் ராஜமெளலி படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் சமந்தா, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளாராம்