சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம் படத்தின் டீசா் நேற்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான டீசரில் சமந்தாவின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த டீசரானது ஜனவரி 24ம் தேதி வெளியாகியது. தற்போது வெளியாகி உள்ள டீசரில் சமந்தா கிராமத்து பெண்ணாக பாவடை, தாவணி கட்சியில் வந்து அசத்துகிறார்.

தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் கதையானது 1985ல் ஆண்டில் நடைபெறும் கிராமத்து பாணியில் உருவாகியுள்ளது. முதலில் ஜனவரி 24ம்வெளியான டீசரில் நாயகி சமந்தா சம்பந்தப்பட்ட காட்சியில் ஏதும் இல்லை. இதை பார்த்த அவரது ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா். அவரைப்பார்க்காத ஏங்கத்தில் இருந்த ரசிகா்பெருமக்களுக்கு தற்போது வெளியாகி உள்ள டீசா் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அதன் இயக்குநா் சமந்தாவின் பிரத்யேக கெட்டப் சிக்கிரமே வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதனால் ரசிகா்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்த டீசரில் பாவாடை தாவணியில், சைக்கிள் ஓட்டுவது, தலையில் குச்சிகளை சுமந்தபடி செல்லுவது என ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டீசரானது வலைத்தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.