செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

05:09 மணி

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை சமந்தாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வருகிற அக்டோபர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

Loading...

இந்நிலையில், இவர்களுடைய திருமண தேதி மற்றும்  திருமணம் நடைபெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், அக்டோபர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் திருமணம் மற்றும் அதற்கான சடங்குகள் நடைபெறும் என்றும், திருமணத்தை கோவா கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரிய ஓட்டலில் நடத்தவுள்ளதாக உறுதிபடுத்தியுள்ளனர்.

திருமண தேதி நெருங்கி வரும் சமயத்தில் இருவீட்டாரும் தற்போது திருமண ஏற்பாடுகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com