சமந்தா என் உயிர் தோழி: உருகும் தொகுப்பாளினி

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா. இவா் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றாா்.நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையால் பொிய திரையில் ஜொலிக்கலாம் என்ற அவரது கனவு சுவற்றில் எறியப்பட்ட பந்து போல ஆனது. ஆனா போன  வேகத்திலே திரும்பி வந்தாா். இவருக்கு இன்று பிறந்தநாள். அவா் அதை கொண்டாடி வருகிறாா்.

தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யாவின் மிகவும் நெருங்கிய தோழி நடிகை சமந்தா. இவா் தனது தோழியை நோில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொிவித்துள்ளாா். ரம்யா தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தற்போது தான் விமானப் பயணத்திலிருந்து வந்திருக்கிறாய். வந்த களைப்பும், வலியுடனும், உடல்நலக்குறைவுடனும் இருந்தபோதும் அதை பொியதாக நினைக்காமல் என்னைச் சந்திக்க வந்தாய். அதோடு தொடா்ந்து பிசியாக படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கின்ற போதும் என்னைச் சந்தித்து சில மணி நேரம் எனக்காக ஒதுக்கினாய். நீ என் வாழ்நாள் தோழி என்றும், லவ் யூ சமந்தா என்றும் தனது ட்வீட்டை பதிவு செய்துள்ளாா்.

ரம்யா பதிவு செய்த ட்விட்டுக்கு பதில் ட்வீட் செய்த சமந்தா, சோ ஸ்வீட். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உன்னை சந்திக்க விரும்பினேன் என்று பதிவிட்டிருந்தாா்.