திருமணத்திற்கு பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் சமந்தாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என அவரது கணவரும் நடிகருமான நாகசைதன்யா கூறியிருக்கிறார்.

தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா அதன் பின் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் ரங்கஸ்தலம், இரும்புத்திரை போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அண்மையில் சிவகார்த்திகேயன் உடன் நடித்த சீமராஜா படமும் பரவலான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருக்கும் சமந்தாவிற்கு தற்போது கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுகிறது என்ற காரணத்தால் நடிப்பிற்கு சிறிது ஓய்வு கொடுக்க இருக்கிறார் என்று அவரது கணவரும் நடிகருமான நாகசைதன்யா தெரிவித்துள்ளார். ஓய்வுக்கு பின் மீண்டும் தொடர்ந்து நடிப்பை தொடருவார் என்றும் தெரிவித்துள்ளார்.