விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா பேசியதாவது:

நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களை சார், சார் என மரியாதையுடன் கூப்பிடுவேன். அவர்களுடன் நெருக்கமாக பழக தயங்குவேன். ஆனால் விஷாலுடன் நடிக்கும்போது எனக்கு ஜாலியாக இருந்தது என்னைவிட இளையவருடன் பழகுவது போன்று சகஜமாக பழகினேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து வாய்ப்பு கொடுத்த விஷாலுக்கும், இயக்குனர் மித்ரனுக்கும் எனது நன்றி

‘பாணா காத்தாடி’ படத்திற்கு பின்னர் யுவன் இசையில் நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்’ என்று சமந்தா பேசினார்