பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி தான் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படுவது போல் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சினிமாத்துறையில் உள்ள நடிகைகள் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சமந்தா “இதுபோன்ற சம்பவங்கள் பற்றி பேசமாலிருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு மட்டும் தெரியும் இந்த சம்பவம் நான் பேசுவதால் பல லட்சம் பேருக்கு தெரியவரும். அதை நாமே விளம்பரப்படுத்தியது போல் ஆகிவிடும். எனவே அதைபற்றி நான் எதுவும் பேசவில்லை” என சப்பைக் கட்டு கட்டியுள்ளர்.

நாடே கொந்தளித்து கருத்து தெரிவித்த போது, சமந்தா பொறுப்பில்லாமல் இப்படி ஒரு அபத்தமான விளக்கத்தை கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.