‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 2017-யில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியான படம் ‘யூ டர்ன்’. தற்போது, சமந்தா கைவசம் தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’, தெலுங்கில் ‘மஜிலி, 96 ரீமேக், O Baby Yentha Sakkagunnave’ என நான்கு படங்கள் உள்ளது.

சமீபத்தில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமந்தா புடவையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.