பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘சமையல் மந்திரம்’ என்ற நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலம் என்பது தமிழ்நாட்டில் உள்ள இளசுகள் அனைவருக்கும் தெரியும். பாலியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை படிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யாவை யாரும் மறக்க முடியாது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை அடுத்து திவ்யா ஒருசில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது அவர் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கவுள்ள ‘குலேபகாவலி’ படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மனைவியாக நடிக்க திவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த படத்தில் அவருக்கு முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புவதாகவும் திவ்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.