அஜித்துக்கு நடந்தது எனக்கும் நடக்கும்: ஷாம் நம்பிக்கை

0
1

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வளர்ந்து வரும் படம் பார்ட்டி. வழக்கமான வெங்கட் பிரபு டீமுடன் இந்த முறை ஷாம் இணைந்துள்ளார். யுவனுக்கு பதில் பிரேம்ஜி இசையமைக்கிறார். இது குறித்து ஷாம் கூறியபோது,

இப்போது ஃபிஜியில் பார்ட்டி பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் வேடம் எனக்கு. வெங்கட் அண்ணன் இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிவா அண்ணன் ஒரு  நாள் போனில் கூப்பிட்டு   கிளம்புங்க  ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு அதிக அன்பு உண்டு. அவர் அழைத்ததால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்.  அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. இருப்பதே பார்ட்டி பண்ற மாதிரிதான் இருக்கு என்று கூறினார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com