தேங்காய் உடைக்க திணறிய சமந்தா! வைரல் வீடியோ

samantha

நடிகையர் திலகம் படத்தில் சமந்தா நடித்து அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்தையும் முடித்து விட்டார். தற்போது தனது கணவர் நாகசைதன்யாவுடன் நடிக்கும் படத்தின் துவக்க விழா பூஜையின் போது சமந்தா தேங்காய் உடைக்க முடியாமல் கஷ்டப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

samantha movie poojai

நடிகைகள் திருமணம் ஆகிவிட்டாலே அவர்களுக்கு அந்தளவுக்கு படவாய்ப்புகள் கிடைப்பது ரொம்ப சிரமம் என்று பரவலாக பேசப்படும் விஷயம். ஆனால் நடிகை சமந்தாவோ தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்பு தான் அதிக படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமந்தாவும் நாகசைதன்யாவும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். அண்மையில் அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அப்பட பூஜையின் போது தேங்காய் உடைக்குமாறு படக்குழுவினர் சமந்தாவிடம் கொடுத்துள்ளனர்.

அந்த தேங்காயை உடைக்க சமந்தா ரொம்பவும் சிரமம் பட்டுள்ளார். தேங்காயை பலமுறை முயற்சி செய்தும் உடைக்க முடியாமல் திணறி இருக்கிறார். இறுதியில் தேங்காயை படக்குழுவினரே வாங்கி உடைத்துள்ளனர். சமந்தா தேங்காய உடைக்க திணறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ரசிகா்பெருமக்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

இது பற்றி சமந்தா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.