தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘விவேகம்’ டீசர் வெளியான அடுத்த வினாடியில் இருந்து டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்துமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த படத்தின் டீசரை வைரலாக்க முடிவு செய்துளனர். மேலும் ‘பாகுபலி 2’ படத்தின் டிரைலர் சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து பிரபல இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி கூறியபோது, ‘கடைசியாக நாம் காத்திருந்த நாள் வந்துவிட்டது. தற்போது தமிழ்நாடு இயல்பாக உள்ளது. ஆனால் நள்ளிரவு 12.01க்கு பின்னர் தமிழ்நாடு இதற்கு முன்னர் பார்த்திராத, இனிமேலும் பார்க்க முடியாத ஒரு பரபரப்பை பார்க்கும் என்று கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி கூறியபடி 12.01க்கு பிறகு தமிழ்நாடு எந்த அளவுக்கு பரபரப்பு அடைகிறது என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்