யாராவது தப்பா விமர்சனம் செஞ்சிங்க, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். சமுத்திரக்கனி

உலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆன ‘பாகுபலி 2’ திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவோடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.1கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி தனது டுவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார். ‘பாகுபலி 2′ என்ற அற்புதமான இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா’ என்று தனது டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.

மேலும் ‘ராஜமெளலி, நீதானய்யா கலைஞன், இந்த படத்தை 100 முறை பார்க்கலாம், பார்க்கணும். உத்தமமான படைப்பு. 5 வருட தியானம். இந்த படத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என் தமிழ் சொந்தங்களே, அனுபவிங்க… என்றும் இயக்குனர் ராஜமெளலிக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.