இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் குறித்து நடிகர் வடிவேலு பேசியதற்கு இயக்குனர் சமுத்திரக்கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த வடிவேல் இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறியதோடு, அவரை அவன்.. இவன் என ஒருமையில் பேசினார். மேலும், இயக்குனர் ஷங்கருக்கும் ஒன்னும் தெரியாது. கிராபிக்ஸை வைத்துக்கொண்டு பொழைப்பை ஓட்டி வருகிறார் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மூடர் கூடம் நவீன் முதல் பலரும் வடிவேலுவை கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.