லிங்குசாமி இயக்கத்தில் வந்த சண்டக்கோழி திரைப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்தது. யாருமே எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. விஷால், விஷாலின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார்.

பரபரப்பும் அதிரடி சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  விஷாலுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா பட நடிகை

இந்த நிலையில் சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது இதன் டீஸர் வெளியாகிவிட்டது.

வரலட்சுமி வில்லியாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த பணிகள் விரைவில் முடிந்து வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதியன்று வெளியாக தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ள கடிதத்தை படத்தின் இயக்குனர் லிங்குசாமி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.