உலகிலேயே முதன் முதலாக 1டிபி மெமரி கார்டுகளை சாண்டிஸ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் விலைதான் கேட்பவர்களை மயக்கமடித்து விழ வைக்கும் அளவுக்கு உள்ளது.

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன்களுக்கு அடிமையாக உள்ளனர். சிறியவர்களுக்கு தேவைப்படும் கேம்ஸ்கள் முதல் முதியவர்களுக்கான திரைப்படங்கள் உள்ளிட்டு அனைத்தையுமே இணையத்தின் உதவியோடு மொபைல் போன்களில் பார்க்கலாம் எனும் நிலை உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மேற்கு தொடர்ச்சி மலை கதாநாயகனுக்கு விஜய் சேதுபதி வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போன்

அனால் இந்த வசதிகளுக்காக நாம் அதிக மெமரி உள்ள மொபைல் போன்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. போன்களில் உள்ள இன்பில்ட் மெமரி போதாத காரணத்தால் எக்ஸ்டர்னல் மெமரி கார்டுகளையும் பொறுத்திக் கொள்ளும் வகையில் ஸ்மார்ட் போன்கல் தயாரிக்கப்படுகின்றன. மொபைல் போன்களில் இப்போது அதிகளவில் ஆப்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்வதால் அதிகப்படியான மெமரி தேவைப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  இனி ’இந்த’ போனில் பேஸ்புக் இருக்காது – சரியும் மார்க்கெட் !

இதனை நிவர்த்தி செய்ய சாண்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1டிபி மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இணையதளங்களில் இந்த கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அனால் இதன் விலைதான் தலையை சுற்ற வைக்கும் அளவுக்கு உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 31000 ரூபாய்க்கு தற்போது இந்த மெமரி கார்டுகள் விற்கப்படுகின்றன. விரைவில் இந்தியாவிற்கும் இந்த கார்டுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.