‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு?

வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் இப்படத்தில் இருந்து அவர் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்க வைக்க பிரபல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கதாநாயகி தேர்வு முடிந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.