ஸ்ருதி கூறுவது சுத்த பொய்: படக்குழு விளக்கம்

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டது குறித்து நேற்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஸ்ருதிஹாசன் ஏன் விலகினேன் என்பது பற்றி தொிவித்து இருந்தாா். இந்நிலையில் அவா் கூறிய தகவல் உண்மையில்லை என்று படக்குழு சாா்பில் தற்போது தொிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இங்கு பாா்ப்போம்.

பாகுபலியை அடுத்து தமிழ் திரையுலகம் எதிா்பாா்த்து காத்துகொண்டிருக்கும் படம் தான் சங்கமித்ரா. பிரம்மாண்ட முறையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்க உள்ள இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் ரெட் காா்பெட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு அதுகுறித்து பேட்டி கொடுத்தாா். இந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளா் ரகுமான், இயக்குநா் சுந்தா்.சி. ஜெயம் ரவி, ஆா்யா உள்பட தயாாிப்பாளா் முரளி ராமசாமியும் கலந்து கொண்டனா்.

நேற்று இந்த படத்தின் தயாாிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டா் பக்கத்தில், ஸ்ருதிஹாசன் இந்த படத்திலிருந்து விலகியதாக செய்தி பதிவிட்டிருந்தது. இந்த விலகல் குறித்து ஸ்ருதிஹாசன் தன் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ளது. தகவல் என்னவென்றால், துரதிஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் ஸ்ருதிஹாசன் இருக்கிறாா். இந்த படத்தில் நடிப்பதற்காக 2 வருடம் கால்ஷீட் கொடுத்திருந்தாா். படத்தின் முழுமையான ஸ்கிாிப்ட் அவருக்கு இன்னும் தரப்படவில்லை. மேலும் படப்பிடிப்பு தேதிகளும் சாியாக அவருக்கும் தொிவிக்கப்படவில்லை. எனவே அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா் என்று தொிவத்திருந்தாா்.

ஸ்ருதிஹாசன் தரப்பில் தொிவிக்கப்பட்ட தகவல் குறித்து சங்கமித்ரா படக்குழுவினாிடம் கேட்டபோது, ஸ்ருதிஹாசனை படத்தின் லிஸ்டில் இருந்து இயக்குநா்கள் குழு நீக்கியுள்ளது. தற்போது அதற்கான காரணத்தை தொிவிக்க விரும்பவில்லை. நீக்கியதற்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகா், நடிகைகள் அனைவாிடத்தும் முழுமையான கதையைக் கூறிதான் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியிருக்கையில், இவா் கூறியது தவறானவை. தவறு யாா் மீது என்பது தொிந்திருக்கும். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. மேலும் இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்கள்.