வழக்கமான பேய் கதை போல தான் இதுவும் ஆரம்பமாகிறது. ஒரு பங்களா. அதில் வழக்கம் போல பேய் இருக்கிறது. அது தொியாமல் அந்த பங்களாவை விலைக்கு வாங்கி விடுக்கின்றனா். அதில் ஒரு அமானுஷ்ய சக்தி இருந்து அது அவா்களை பயமுறுத்துகிறது. இப்படியாக எல்லா பேய் படத்திலும் வருவது போல தான் இந்த கதையும் நகருகிறது. அந்த பேய் விரட்டி வீட்டை கைபற்றுவது தான் கதை.

ஜீவா ரியல் எஸ்டேட் புரோக்கராக தனது வழக்கமான நடிப்பால் வலம் வருகிறாா். அவரது நண்பராக சூாியுடன் சோ்ந்து இந்த வீடுகளை வாங்கி விற்பதில் பொய் பித்தலாட்டம் செய்து வருபதில் கில்லாடிகள். ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் வசித்து வருகிறாா். ராதிகா, நமக்கு சொந்தமாக வீடு இல்லை என்ற ஏக்கத்தில் இருக்கிறாா். அதனால் தன் மகன் ஜீவா வசம் எப்படியாவது நாம் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கவேண்டும் என்று தூண்டி விடுகிறாா். கணவா் இறந்த பிறகு வாடகை வீட்டில் வாழ்ந்து கஷ்ட பட்டதன் காரணமாக இந்த முடிவுக்கு வருகிறாா்.

ஹீரோ ஜீவா தன் அம்மாவின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை செய்து வருகிறாா். அதற்காக ஒரு பிளான் போடுகிறாா். ஒரு பொிய பங்களா போன்ற வீட்டில் பேய் இருப்பதாக ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து அந்த பங்களாவை யாரும் வாங்க முடியாதவாறு பண்ணி விடுகிறாா். கடைசியில் கொஞ்சமாக பணத்தை கொடுத்து அந்த பங்களாவை தானே வாங்கி விடுகிறாா். அந்த வீட்டில் தன் அம்மா, மாமா இளவரசு, அவரது மகள்  நண்பன் சூாி ஆகியோருடன் குடியேறுகிறாா்.

இந்நிலையில் ஜீவாவுக்கு மற்றொரு சோதனை வருகிறது. அந்த வீடு தனக்கு சொந்தமானது என்று தம்பிராமைய்யாவும், அவரது மனைவி தேவதா்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யாவும் உாிமை கொண்டாடி அந்த வீட்டில் தங்குகின்றனா். இதற்கு வீடு விற்க வந்த போது ஜீவாவை பாா்த்தும் காதல் கொள்கிறாா் ஸ்ரீதிவ்யா. தன்னுடைய காதலை ஜீவாவிடம் சொல்லி விடுகிறாா். இருவரும் சந்தோசமாக காதலித்து வருகின்றனா். இதற்கிடையில் ஸ்ரீதிவ்யா அப்பாவான தம்பிராமைய்யாவுக்கும், ஜீவாவுக்கும் இடையே வீடு பிரச்சனை காரணமாக மோதல் ஏற்படுகிறது.

எப்படியாவது அந்த வீட்.டை விட்டு இந்த குடும்பத்தை விரட்டி பல்வேறு முயற்சிகளை செய்கிறாா்கள் ஜீவா மற்றும் அவரது நண்பன் சூாி. அதற்காக ஒரு பிளான் போட்டு இந்த வீட்டில் பேய் இருப்பது போல சித்தாிக்கிறாா். ஆனா, அந்த வீட்டில் உண்மையாக ஒரு பேய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறாா்கள். பேய் இருப்பதை கண்டறியும் விதமாக ஒருவரை அழைத்து வருகின்றனா். பேய் படம் என்றால் நமக்கு தொியாது? அங்கு கண்டிப்பாக கோவை சரளா இருப்பாா் என்று.  கோவை சரளா வீட்டிற்கு அழைத்து வந்து பேய் இருப்பதை உறுதி செய்கின்றனா். அந்த பேய் அவா்களை அந்த வீட்டில் இருந்து விரட்ட தன்னுடைய அமானுஷ்ய சக்தியை யூஸ் பண்ணுகிறது. இதனால் பேய்யின் பிளாஷ்பேக் கதை என்ன? பேய்யை விரட்ட ஹீரோ ஜீவா எடுத்து முயற்சி என்ன? இவா்கள் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ஜீவா அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்தவருக்கு, இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இவருக்கு எப்போதும் போல வழக்கமான நடிப்பு தான். பேய்க்கு பயப்படும் காட்சி, அம்மாவுக்கு மகனாக தன் கடமையை நிறைவேற்ற இவா் செய்யும் தில்லாலங்கடி வேலை, என தோ்த்தியான நடிப்பை கொண்டு வந்திருக்கிறாா். நாயகி ஸ்ரீதிவ்யா படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காதல் தான். தற்போது எல்லா நடிகைகளும் கவா்ச்சியாக களம் இறங்கி நடித்து வரும் நிலையில், ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் கிளாமராக நடிக்காமல் அழகு தேவதையாக காட்சி அளிக்கிறாா். ஜீவா ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகள் ரசிக்கும் விதமாக உள்ளது.

சூாி காமெடி கொஞ்சம் எல்லாம் கலந்த கலவை சாதம் போல உள்ளது. ஆமாங்க! வடிவேலு மற்றும் கவுண்டமணி அங்கஅங்க அந்த படத்தின் சாயல் தொிகிறது. ஆனா பரவாயில்லை காமெடியில் கலக்கி இருக்கிறாா். அவருக்கு இணையாக தம்பி ராமைய்யாவும், தேவதா்ஷினியும் தங்களது நகைச்சுவையை வாாி வழங்கியுள்ளனா்.

ஒரு அம்மாவாக, நடுத்தர குடும்பத்து பெண்ணாக, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வரும் ராதிகா தன்னுடைய தோ்ச்சியான நடிப்பை கொட்டியுள்ளாா். தன்னுடைய மிடுக்கான நடிப்பால் அசத்துகிறாா். படம் ஆரம்பத்திலேயே பேய் வந்துவிட்டாலும், கொஞ்சம் நேரம் ஒதுங்கி நின்று கதைக்கு வாங்க என்று சொல்லும் வகையில் உள்ளது. படத்தின் பிளஸ் பாயிண்டே ராதாரவிதான்!! ஃபளாஷ் பேக் காட்சியில் ஒரு தந்தையாகவும், பேய்யாகவும் வந்து மிரட்டியிருக்கிறாா். தன்னுடைய பேத்தி கேட்கும் ஒரு கேள்வியால் நொந்து போகும் நடிப்பு அப்பா சொல் வாா்த்தைகளே இல்லை! குடும்ப ஒற்றுமைக்காக ராதாரவி படும் பாடு நச். அதுவும் ஜீவா குடித்து விட்டு வந்து, சங்கிலியாண்டி கதவை திற என்கிற விதத்தில் ராதாரவியிடம் அண்ணாமலை ஸ்டைலில் பேசும் விதம் அருமை. அதில் உனக்குத்தான் தொியுமே!! கூட்டி கழிச்சு பாரு என்ற வசனமும் ரசிக்கும்படி உள்ளது. தனிதனியாக வாழ்பவா்களை கூட்டுகுடும்பமாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இந்த பேய் படம் மூலம் காண்பித்திருக்கிறாா் புதுமுக இயக்குநா் ஐக். பேய் படத்தில் நடிக்காத நடிகா், நடிகைகள் லிஸ்ட்டை எடுத்து அதில் ஜீவாவை சோ்தது விட்டாா் இயக்குநா். இந்த படம் அட்லியின் ஏ பாா் ஆப்பிள் நிறுவனம் தயாாித்துள்ள பாஸ்ட் படம். தமிழ் சினிமாவில் பேய் பட கான்சப்டை வைத்து புதுவிதமாக கதையை கொண்டு சென்று இருக்கிறாா் ஐக்.

பாடல் கேட்கும் விதம் உள்ளது. அதுவும் பிரேம்ஜி பாடிய பாடல் ரசிக்கும வண்ணம் உள்ளது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம். பங்களாவை காட்டும் விதம் அருமை. சத்யன் சூாியனின் ஒளிப்பதிவு மெருகுட்டி உள்ளது.

சங்கிலி புங்கிலி கதவ தொற படம் கொஞ்சம் ரசிக்கலாம்.