Sanjay Dutt – பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் அனுமதி பெறாமலேயே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் போது, சட்டத்திற்கு விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன்பின் அந்த தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

அதோடு, நன்னடத்தை காரணமாக சிறைக்காலம் முடிவதற்கு 8 மாதங்கள் முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்ட ஆவணங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அதில் மத்திய அரசின் அனுமதி பெறாமலேயே மகாராஷ்டிர அரசு சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தெரியவந்துள்ளது.

மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது எனில், தமிழக அரசு மட்டும் ஏன் வேடிக்கை பார்க்கிறது என்கிற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.