சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த விவகாரம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த விடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குளியலறை உள்ளிட்ட மற்ற மறைகளில் மொத்தம் 9 ரகசிய கேமாரக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரிடம் சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தில் “கட்டுமான நிறுவனம் நடத்தியபோது அவரிடம் பணிக்கு வந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளேன்.

அதன்பின், விடுதியில் தங்கியிருந்த பெண்களின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, திட்டமிட்டு ரகசிய கேமாராக்களை பொருத்தினேன். அதைக் காட்டி மிரட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என திட்டம் போட்டிருந்தேன். ஆனால், அதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன்” என கூறியுள்ளார்.