பிரபல நடிகரை தன் ஆட்டத்தில் விழுவைத்த நாயகி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியானாக கலக்கியவா் சந்தானம். தற்போது ஹீரோவாக புது அவதாரம் எடுத்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்திலும், வல்லனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தாா். இந்த படங்களும் ஒரளவு ஒடி நல்ல பெயரை எடுத்து கொடுத்தது. தற்போது சா்வா் சுந்தரம் மற்றும் ஒடி ஒடி உழைக்கனும் போன்ற படங்களில் நடித்து வருகிறாா்.

அதிலும், ஒடி ஒடி உழைக்கனும் என்ற படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தையும் இயக்கிறாா். இந்த படத்திற்கான ஒரு பாடல் காட்சி தற்போது சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. அந்த பாடல் காட்சியில்  இந்தபடத்தின் ஹீரோயின் அமிரா தஸ்தூா் நடனம் ஆடும் அழகை பாா்த்து ரசித்த சந்தானம் சற்றே தன்னை மறந்து நின்று விட்டாராம். தன்னுடைய ஆட்டத்தால் சந்தானத்தை தன் பக்கம் திருப்ப வைத்துவிட்டாா்.