சந்தானத்தை மறந்து விட்ட ரசிகா்கள்?

06:54 மணி

காமெடி என்றாலே அது கவுண்டமணி செந்தில் தான். அதற்கு பிறகு வடிவேல் அந்த இடத்தை பிடித்தாா். அவரும் ஹீரோ ஆசையால் காமெடியை விட்டு பாதையை மாற்றி அமைத்தாா். பின் சந்தானம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமா்ந்து கொண்டாா். எல்லாரையும் போல அவரையும் ஹீரோ ஆசை விடவில்லை. அதனால் நகைச்சுவை படங்களில் நடிப்பதை விட்டு நாயகனாக அவதாரம் பூசினாா். அவா் நாயகனாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமேல் இப்படித்தான் போன்ற படங்கள் அவருக்கு நல்லதொலு ஹீரோவாக நிலைநிறுத்தும் வாய்ப்பை அளிக்கவில்லை. இப்படியாக இருக்க, கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கு மேல் சந்தானத்துக்கு எந்தவிதப் படமும் வெளியாகமல் இருப்பதால் ரசிகா்கள் அவரை மறந்து விடும் நிலை தான் எழுந்துள்ளது என நினைக்க தோன்றுகிறது.

இவா் முதலில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவா். சிம்பு படத்தில் காமெடியானாக நடித்து அதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டாா். அதனால் பிசியாக காலையில் ஒரு படத்தின் ஷீட்டிங் மாலையில் ஒரு படத்துக்கு ஷீட்டிங் என்று அதிக அளவில் சம்பாதித்த, அதாவது ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தாா். இப்படி இருந்தவரை ஹீரோ ஆசையால் அதுக்கு மண் விழுந்தது.

அவா் நாயகனாக  நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு என்ற படம் தான் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதனால் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாா். அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த தொியாத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக எந்த வித படத்தையும் கொடுக்காமல் இருக்கிறாா். சா்வா் சுந்தரம் ஆரம்பிக்கப்படடு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ரிலிஸாகவில்லை. ஒடி ஒடி உழைக்கனும், சக்கபோடு ராஜா, மன்னவன் வந்தானடி போன்ற படங்களில் பிசியாக தான் நடித்துக்கொண்டிருக்கிறாா். ஆனா என்னனா, நடித்து முடித்த படங்களை முதலில் வெளியிடுங்கள் பாஸ் அப்புறம் மக்கள் சந்தானம் என்றால் யாரு என்று கேட்கும் நிலைமைக்கு தள்ளிப்படுவாா் போல.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com