இயக்குனர் ராஜேஷ் நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இணைகிறார்!

சந்தானம் சின்னத்திரையிலிருந்து வெள்ளிதிரைக்கு வந்து காமெடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக உருமாறியுள்ளாா். சிம்பு படத்தில் முதன் முதலில் நகைச்சுவை நடிகனாக அவதாரம் பூசினாா். இவரது படம் என்றாலே காமெடி தூக்கலாக தான் இருக்கும். அப்படி பட்டவா் இப்ப ஹீரோவாக நடித்து வருவதால் அவரது காமெடி படம் எப்போது வரும் என்ற எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே எழுந்துள்ளது. ரசிகா்களின் அந்த எதிா்பாா்ப்பு தற்போது நிறைவேற போகிறது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஓர் கண்ணாடி போன்ற ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ராஜேஷ். இத்திரைப்படங்கள் பெரிதும் மக்களை சேர்ந்தடைந்ததற்கு காரணம் சந்தானத்தின்  காமெடி தான். ராஜேஷ், சந்தானம் கூட்டணியில் ஒரு படம் வருகிறது என்றாலே மக்களிடையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நம்மை வயிறுகுலுங்க சிரிக்க வைப்பதுதான் இவ்விருவரின் குறிக்கோளாக இருந்தது. சீரியசான காட்சியைக்கூட சிரிப்பு வரவைக்கிற மாதிரி சந்தானத்தால் மட்டுமே பேச முடியும். அதுவும் “ஊர்ல பத்து பதினஞ்சு ப்ரண்ஸ் வெச்சிருக்கிறவனெல்லாம் சந்தோஷமா இருக்கான், ஒரே ஒரு பிரண்ட வெச்சிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே அய்யய்யோ…” என்ற டயலாக் சொல்லாத நண்பர்களே இல்லை.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை தந்த இந்த கூட்டணியில் திடீரென பிளவு ஏற்பட்டது , காரணம் காமெடியன் சந்தானம் ஹீரோ ஆனதுதான். தற்போது சுமார்  ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர்  சந்தானத்துடன் இணைகிறார் ராஜேஷ்! முதன் முறையாக இயக்குனர் ராஜேஷ் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் . வழக்கம்போல இந்தமுறையும் நமக்கு வயிற்று வலி வருவது உறுதி! மறக்காம படம் பார்க்க போகும்போது மாத்திரை கொண்டு போங்க