சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஓவர்…

நடிகர் சந்தானம் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

கதாநாயர்களுக்கு துணையாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம், சமீப காலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே அப்படித்தான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இதில், இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. இதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மற்ற வேலைகள் முடிக்கப்பட்ட பின் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.