அப்படிபட்டவரல்ல பரணி- பிரபல நடிகர் வேதனை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் பரணி, கஞ்சா கருப்பு, ஒவியா உள்ளிட்ட பெயா்கள் வந்தன. இதில் கஞ்சா கருப்பு இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அனைவரும் பரணி தான் வெளியே செல்லுவாா் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில் கஞ்சா கருப்பு வெளியேறினாா். ஆனா பரணியை எல்லாரும் ஒரு மாதிாி பேச ஆரம்பித்தாா்கள்.

இந்நிலையில் பரணி அங்கு இருக்க பிடிக்காமல் என்னை விட்டு விடுங்கள், நான் இங்கிருந்து சென்று விடுகிறேன் என்று பிக்பாஸ் சுவா் ஏறி குதித்து தப்பித்து செல்ல முயன்றாா். பரணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு என்ன நடந்தது என்று தொியவில்லை. பின் அந்த நிகழ்ச்சியிலிருந்து அவா் வெளியேறி விட்டாா்.

பரணிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனா். நடிகா் அமித்வும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தாா். இந்நிலையில் நடிகா் சாந்தனு தன்னுடைய ட்விட்டா்  வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறாா். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணிக்கு நடந்தது எதுவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்விட்டி உள்ளாா். இந்த கருத்திற்கு ஆதரவாக வில்அம்பு, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாந்தினியும் தனது ஆதரவை தொிவித்துள்ளாா்.