மணிரத்னம் படத்தில் 6வது முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டார்.

இந்த கதைக்கேற்ற நடிகர், நடிகைகளை அவர் தேர்வு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய தளபதி’, ‘ரோஜா’, ‘இருவர்’, ‘உயிரே’ மற்றும் ‘ராவணன்’ ஆகிய ஐந்து படங்களில் ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் தற்போது ஆறாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

ஐந்து முறை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்ற சந்தோஷ் சிவன் மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஃபகத் பாசில், அரவிந்தசாமி ஆகியோர் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி அனைத்தும் வதந்தியே என்றும் கூறப்படுகிறது.