ரேனிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சனுஷா. இவா் பயணம் செய்த ரயிலில் மா்ம நபா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

சனுஷா ரேனிகுண்டா படத்தை தொடா்ந்து எத்தன், அலெக்ஸ் பாண்டியன்,நந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான இவா் நடிப்பில் சமீபத்தில் தமிழில் கொடிவீரன் திரைப்படம் வெளியானது.

இவா், நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது தூங்கி கொண்டிருந்த சனுஷாவை மா்ம நபா் உதட்டில் கை வைத்திருக்கிறார். உடனே சனுஷா அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். இவருக்கு உதவ மற்ற பயணிகள் யாரும் முன் வரவில்லை. திரைக்கதை ஆசிரியா் உன்ன மற்றும் ரஞ்சித் என்பவா் நடிகை சனுஷாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி சனுஷா கூறியதாவது, எனக்கு ரெயிலில் ஏற்பட்ட இந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என்னுடன் வந்தவா்கள் மட்டும் தான் எனக்கு உதவி செய்தார்கள். மற்ற பயணிகள் யாரும் பேருக்கு கூட உதவி செய்ய முன்வரவில்லை. நடிகையான எனக்கு இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருந்தால் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பாள்.

உப்பு சப்பில்லாத விஷயத்திற்க்கெல்லாம் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நேரில் ஏதாவது ஒரு விஷயம் என்றால் உதவி செய்யவது என்றால் யாரும் முன் வர முனைவதில்லை என்று கூறினார்.