‘காற்று வெளியிடை’ படத்தின் தோல்விக்கு பின்னர் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். ஹீரோவாக ராம்சரண்தேஜாவை உறுதி செய்த மணிரத்னம் தற்போது ஹீரோயினியையும் புக் செய்துவிட்டாராம். அவர்தான் சாரா அலிகான்

பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகானின் முதல் மனைவிக்கு பிறந்த இவர் சமீபத்தில் ஒரு இந்தி படத்தில் அறிமுகமாக காத்திருந்தார். ஆனால் அந்த படம் தாமதம் ஆகிக்கொண்டு வரும் நிலையில் மணிரத்னம் தனது படத்தில் உறுதி செய்துவிட்டார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளதால் முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது என்பதால் சயீத் அலிகானும் அவரது புதுமனைவி கரீனா கபூரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.