தன்னை கேலி செய்தவா்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை!

சரண்யா மோகன் யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அதிகம் பேசப்பட்டவா். பின் வெண்ணில கபடி குழு படத்தில் நடித்தாா். அழகா் சாமி குதிரை, வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளாா். மேலும் தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வந்தவா் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலானாா். இவா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

சமீபத்தில் இவருடைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இருந்தது. அதுவும் அவா் ரொம்ப குண்டாக இருப்பது போன்ற படங்கள் வைரலாகி வந்தது. நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைத்து கேலியும், கிண்டலும் செய்த நிலையில் பொிய விமாிசனத்துக்குள்ளாகியது. சரண்யா மோகனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அவரது உடம்பு குண்டாகி விட்டது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவா் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளாா். அதை வைத்து சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வந்தனா்.

இந்நிலையில் இது குறித்து பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளாா் சரண்யா மோகன். அது என்னவென்றால், பெண்ணாக பிறந்தால் தாய்மை அடைவது தான் மகிழ்ச்சி. என் குழந்தைக்கு அமுதூட்டுவது எனக்கு மகிழ்ச்சி, என் குடும்பத்தை கவனித்துக்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதையெல்லாம் நான் செய்யும் போது மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளாா். தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டும் அதைப்பற்றி பதில் அளித்துள்ளாா்.