ஜூங்கா படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டாக நடைபெற்றது. இந்த படத்தை விஜய் சேதுபதிதான் தயாரித்துள்ளார். நடிகராக இருந்து தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ள விஜய்சேதுபதியின் புரொடக்ஷன் தயாரிப்பில் ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகா் அருண்பாண்டியன் வழங்கும் படம் ஜூங்கா.

இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண்பாண்டியன், பிரபல தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம். ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி.சிவா உள்ளிட்டவர்களும்ஈ இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி போன்றவா்களுடன், விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, சரண்யா பொன்வண்ணன், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஜூங்கா இசை விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, நான் விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதன் முதலாக நடித்தேன். அப்போது விஜய் சேதுபதி என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா? என கேட்பார். அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். குழந்தை போன்ற முகம். கட்டாயமாக பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். அது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். இந்த முகமெல்லாம் பிடிக்குமா என்று கேட்டவரிடம் உங்களை போல உள்ளவர்கள் இன்று பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார்கள் என்று கூறினேன். பார்க்கலாம்மா என்று யோசித்தவரிடம் இன்று சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். இது எவ்வளவு ஒரு பெரிய மகிழ்ச்சி. ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என்றார்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து ஜூங்கா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். தென்மேற்கு பருவகாற்று படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிக்கிறேன்.