சரத்குமாரின் முதல் மகளான வரலட்சுமி ‘சக்தி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளில்உருவாக இருக்கிறது.இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கதில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் இந்த படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பூஜா என்ற மற்றொரு பெண் அறிமுகமாகவிருக்கிறார்.

       அந்த பூஜா வேறுயாருமில்லை அவர் தான் சரத்குமாரின் இரண்டாவது மகள் ஆவார்.‘அபேரட்டல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சரண்யா லூயிஸ் தயாரிக்கும் இந்தபடத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.போலீஸுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கிற சுவாரஸ்யமான கதையில் இப்படம் உருவாக இருக்கிறது.

       இளையராஜா படதொகுப்பில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில், கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில் உருவாக உள்ள ‘சக்தி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்துவங்கவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.