நடிகர் சரத்குமார் கமல்ஹாசன் மோதல் !

சமீப காலமாக வலைத்தளங்களில் அரசியல் பேசி பெரும் மக்கள் ஆதரவை அள்ளியுள்ளார் கமல். மக்களிடம் இவருடைய கருத்துக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் அரசியலை சார்ந்த யாருக்கும் கமல் கூறும் எந்த ஒரு கருத்திலும் ஈடுபாடில்லை . அவர் கூறும் ஒவ்வொன்றிற்கும் குதர்க்கமாய் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் . கமலுக்கு அரசியில் தெரியாது என்றும், அவர் திடீரென ஏன் அரசியில் பேசுகிறார் என்றும், அவருக்கு மன நிலை சரியில்லை என்றும் அரசியல்வாதிகளிடமிருந்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளனர் .

இதனிடையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத் குமார் “கமல் இத்தனை   நாட்கள் அமைதிகாத்துவிட்டு திடீரென அரசியல் பேச கரணம் என்ன? புரட்சி தலைவி அம்மா ஆட்சி  இருக்கும் போது  தமிழ்நாட்டில் ஊழல் நடப்பது அவருக்கு தெரியவில்லையா? விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தான் இந்த நாட்டை விட்டு சென்றுவிடுவதாக கூறிய கமல், தற்போது நாட்டுக்காக குரல் கொடுப்பது எதற்கு? இதை ஏன் அவர் அம்மா ஆட்சியின் போது செய்ய வில்லை?” என்று சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் பொது கூட்டத்தில் கேட்டார்.

கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற பயத்தில் சரத் குமார் இப்படி பேசுகிறாரா என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .