மீ டூ என்ற ஹேடக் மூலம் பெண்கள் சமீப காலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி அவரை ‘பொய்யர்’ என விமர்சித்தார். கடந்த ஒரு வார காலமாக இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  என்ன ஒரு கலாச்சாரம் ! பாதிக்கப்பட்ட மீ டூ சின்மயி அதிரடி

இந்நிலையில், வைரமுத்து நேற்று (அக்டேபார் 14) விடியோ மூலம் “தன்மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார்” என கூறினார்.

சின்மயி கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்க தன்னிடம் அசைக்காத முடியாத ஆதாரங்கள் உள்ளதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  தமிழிசை பதவி இன்னும் கொஞ்ச நாள்தான் - எஸ்.வி.சேகர் கிண்டல்

சின்மயிக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக களத்தில் இறங்கிய சின்மயியின் தைரியம் வரவேற்கத்தக்கது எனவும், சினிமா துறையில் மட்டுமில்லாமல்,அனைத்து துறையிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கத்தான் செய்கிறது என்றும், அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஏழரை ஆரம்பித்து விட்டது: பாஜக பலம் 272-ஆகக் குறைந்தது!

சமூகத்தில் ஆண்கள், பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை மிக இயம்வயதிலேயே கற்பிக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.