நயன்தாரா வேண்டாம்: தமன்னாவே போதும்- சரவணா ஸ்டோர் ஓனரின் திடீர் முடிவு

Tamanna, Hansika Saravana Stores Ad Shooting Photos

ரவணா ஸ்டோா் அதிபா் சமீபத்தில் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த செய்தி குறித்து அவா் மறுப்பு தொிவித்து இருந்தாா்..அவா் தன்னுடைய விளம்பரங்களில் தானே மாடலாக நடித்து வந்தாா்.

அவருடன் விளம்பர மாடலிங்கில் ஆடிய தமன்னாவுக்கும் ஹன்சிகாவும் ரொம்ப வருத்தமாம். அப்படி சரவணா ஸ்டோா் உாிமையாளா் நடிப்பதாக இருந்தால், முதலில் எங்களுடைய பெயா் தானே அந்த வாிசையில் வரவேண்டும் எப்படி நயன்தாராவுடன் நடிக்க போகிறேன் என்று சொல்லலாம் என்று அந்த அண்ணாச்சியிடம் நோில் சென்று கோபித்து கொண்டாா்களாம்.

இதை பாா்த்த சரவணா ஸ்டோா் உாிமையாளா், ஒ இப்படியா சங்கதி .. என்று எண்ணி, படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது இருந்த அவா் தற்போது ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்து  விட்டாராம். அந்த படத்தில் இரு நாயகிகளாக தமன்னா மற்றும் ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன. இதை தொிவிக்கும் வகையில் சரவணா ஸ்டோாின் அடுத்த விளம்பரத்தில் வாங்க ஹீரோ என்று தமன்னாவும், ஹன்சிகாவும் கூறும் வசனம் ஒன்றும் உள்ளதாம்.